பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 79

படித்துக் கொண்டே வந்த முதியவரின் முகம் சீற்றத்தின் எல்லையைக் காட்டியது. அவ்வளவு சினத்தையும் கையில் சேர்த்து மேஜை மேலிருந்த மணியை ஓங்கிக் குத்தினார். இரண்டு மூன்று முறை அப்படிக் குத்தி மணி அதிர்ந்த பின் ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து அடக்க ஒடுக்கமாக நின்றான்.

"அந்தக் கழுதை அரவிந்தன் இருந்தால் உடனே கூப்பிடு, வரவரப் பைத்தியம் முற்றித்தான் போய்விட்டது பையனுக்கு'

சிறுவன், அரவிந்தன் என்று பெயர் குறிக்கப் பெற்ற ஆளைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்காக அச்சகத்தின் உட்புறம் ஒடினான். பலவிதமான அச்சு எந்திரங்களின் ஒசைக்கிடையே அச்சுக் கோப்பவர்களுக்குப் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த ஒர் அழகிய வாலிபனைப் போய் கூப்பிட்டான் சிறுவன். சிவந்த நிறம். உயர்ந்த தோற்றம். காலண்டர்களில் கண்ணனும் இராதையுமாகச் சேர்ந்து வரைந்துள்ள ஓவியங்களில் குறும்பும் அழகும் இணைந்து களையாகத் தோன்றுமே கவர்ச்சியானதொரு கண்ணன் முகம் அதுபோல் எடுப்பான முகம் அந்த வாலிபனுக்கு. கதர் ஜிப்பாவும், நாலு முழம் வேட்டியுமாக எளிமையில் தோன்றினான் அவன்.

"சார் முதலாளி வந்திருக்கிறாரு உங்களைக் கூப்பிடறாரு... மேஜை மேலிருந்து எதையோ எடுத்துப் படிச்சுட்டு ரொம்பக் கோபமாயிருக்காருங்க...'

தேடி வந்த சிறுவன் பின் தொடர வாலிபன் முன் புறத்து அறையை நோக்கி விரைந்தான். மனத்தில் துணிவையும் நம்பிக்கையையும் காட்டுகிற மாதிரி அவனுடைய நடை கூட ஏறு போன்ற பீடு நடையாக இருந்தது

முன்புறத்து அறை வாசலில் அவன் தலை தென்பட்டதோ இல்லையோ அவர் சீறிக் கொண்டு இரைந்தார். - 'அரவிந்தா இதென்னடா இது உளறல் உன்னை இங்கே நான் 'ப்ரூப் திருத்துவதற்காகத்தான் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன்; சமூகத்தைத் திருத்துவதற்காக அல்ல."

அவர் கையிலிருந்த நோட்டுப்புத்தகத்தைப் பார்த்தவுடன் அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு சற்றே வெட்கத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/81&oldid=555805" இலிருந்து மீள்விக்கப்பட்டது