பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 85

மறுநாள் காலை அந்த அச்சுக்கோப்பவன் தன் இடத்துக்கு வந்தபோது அங்கே கீழ்க் கண்டவாறு, கம்போஸ் செய்து வைத்திருந்தது.

நாலே நாட்களில் 150 கனாக்களையும் 200 அனாக்களையும் 70 'லை'யன்னாக்களையும் 'டி.பன்ஸெட் மூலம் கடத்திய தீரனே! இன்று மாலை மூன்று மணிக்குள் அவற்றையெல்லாம் திரும்பக் கொண்டு வருகிறாயா? அல்லது இதற்குமேல் நீயே கம்போஸ்" செய்து கொள்ளலாம்.'

அரவிந்தன்.

இதைப் படித்து விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான் அந்த ஆள். உடனே வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அரவிந்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். ஒரு சினிமா தியேட்டர் காரரிடம் நிறைய பாக்கி விழுந்து விட்டது. அவருடைய தியேட்டருக்கு அடித்து அனுப்பிய சுவரொட்டிகளில் அச்சகத்தின் பேர் போடுகிற மூலையில் உங்கள் பாக்கி விஷம் போல் ஏறிவிட்டது; கடிதம் எழுதியும் பில் அனுப்பியும் எனக்கு அலுத்துப் போயிற்று. விரைவில் பாக்கியைத் தீருங்கள். வேறு வழியில்லாததால் உங்கள் செலவில் உங்கள் பேப்பரிலேயே இதைக் கம்போஸ் செய்து அனுப்புகிறேன்' என்று சிறிய எழுத்துகளில் அச்சிட்டுக் கீழே அச்சகத்தின் பெயரையும் போட்டு அனுப்பி விட்டான் அரவிந்தன். சுவரொட்டி ஒட்டப்பட்டபோது ஊரெல்லாம் கேலிக் கூத்தாகி விட்டது. மறுநாளே ஓடோடி வந்து பாக்கியைத் தீர்த்து விட்டுப் போனார்'சினிமா தியேட்டர்க்காரர்.

இந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிர்வாகத்தையே தனித் தூண்போலிருந்து தாங்கிக் கொண் டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்திய மான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்து விடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளில் குறும்பு நகை நெளிய அவன் பேசும் போது சுற்றி நிற்பவர்களின் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/87&oldid=555811" இலிருந்து மீள்விக்கப்பட்டது