பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 87 "நான் ஏழரை மணி வரை இங்கேயே இருக்கப் போகிறேன். காரிலேயே போய் விட்டு வந்துவிடு அரவிந்தா...!"

அவருக்குத் தெரியாமல் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை யும் எடுத்துக் கொண்டான் அரவிந்தன்.

'நினைவு வைத்துக் கொள். இப்போது நீ போகிற இடத்திலிருந்து தான் முதலில் நாம் வெளியிடப் போகிற நூல்கள் கிடைக்க வேண்டும்; காரியத்தைப் பழமாக்கிக் கொண்டுவா...' என்று வாசல் வரை உடன் வந்து கூறி அவனைக் காரில் ஏற்றி அனுப்பினார் மீனாட்சி சுந்தரம்.

மருள் மாலைப்போதின் ஒளி மயங்கிய மாலை, அழகு மதுரை நகரின் தெருக்கள் எப்படி இருக்கிறதென்று கவியின் கண்ணோடு அநுபவித்துக் கொண்டே காரில் விரைந்தான் அரவிந்தன்.

திண்டுக்கல் ரோட்டின் அருகில் மேற்கே திரும்பியதும் டிரைவர், "எங்கே போகணுங்க?' என்று இடம் கேட்டான். அரவிந்தன் இடத்தைச் சொன்னான். வேகத்தில் மனம் துள்ளியது. நினைவுகள் உல்லாசத்தில் மிதந்தன. 'நினைவைப் பதித்து மன அலைகள் நிறைத்துச் சிறுநளினம் தெளிந்த விழி என்று வாய் இனிமையில் தோய்த்த குரலை இழுத்துப் பாடியது. மனம் அந்த முகத்தை நினைத்தது. இதழ்களில் குறுநகை நிலவியது.

மங்களேஸ்வரி அம்மாள் வீட்டு டிரைவருக்கு வீட்டை அடையாளம் காட்டித் திருப்பியனுப்பிய பூரணி வீடு பூட்டியிருப்பது கண்டு திகைத்து நின்றாளல்லவா? அந்த சமயத்தில் இன்னொரு சிறிய கார் அவ்வீட்டு வாசலில் வந்து நின்றது. - -

'பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் வீடு இதுதானே?" -

பூட்டிய கதவைப் பார்த்துக் கொண்டு மலைத்துப் போய் நின்ற பூரணி விசாரிக்கும் குரலைக் கேட்டுத் திரும்பினாள். திரும்பிய முகத்தைப் பார்த்து அரவிந்தன் ஆச்சரியத்தில் திளைத்தான். அதே முகம்! அதே அழகு நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த வதனம்! அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/89&oldid=555813" இலிருந்து மீள்விக்கப்பட்டது