பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 89 பிணை என்று நினைத்துச் சீற்வேண்டியதில்லை திண்ணையி லிருந்து எழுந்து விறுவிறுவென்று நடந்து போய் காரில் உட்கார்ந்து கதவைப் படீரென்று அடைத்துக் கொண்டான் அரவிந்தன். கார்துசியைக் கிளப்பிக் கெண்டு விரைந்தது. கோபத் தோடு ஏதோ சொல்ல வாய்திறந்த பூரணி, அந்த சொற்களை வாய்க்குள்ளேயே அடக்கிக்கொண்டாள். தான் தெருவில் மயங்கி விழுந்தது அந்த இளைஞனுக்கு எப்படித் தெரியும் என்ற வினா அவள் மனத்தில் பெரியதாய் எழுந்தது. திரும்பினாள். திண்ணையில் அவன் உட்கார்ந்திருந்த இடத்திற் கருகில் அவன் கையில் கொண்டுவந்த நோட்டுப் புத்தகத்தை மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தான்.

அதைக் கையில் எடுத்துக் கொண்டு தெருவில் விரைந்து இறங்கி "மிஸ்டர் அரவிந்தன்' என்று அவள் எழுப்பிய குயிற் குரலின் ஒலி எட்ட முடியாத தூரத்துக்கு, கார் போயிருந்தது. அந்த முகமும் அந்தச் சிரிப்பும் காளையைப் போல் நடந்து போய்க் காரில் ஏறிய விதமும் அப்போதுதான் அவள் நினைவை நிறைத்தன. ஒரு கணம்தான்; ஒரே கணம் தான் அந்த நினைவு. அடுத்த வினாடி சொந்தக் கவலைகள் வந்து சேர்ந்தன. பூட்டி யிருக்கும் வீடு, தங்கையும் தம்பிகளும் எங்கே போனார்களென்று தெரியாத திகைப்பு, எல்லாம் வந்து அவள் மனத்தில் சுமை பெருக்கி அழுத்தின!

7

பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் என் வழி உணர்வுதான் எங்கும் காண் * 'மண் வழி நடந்தடி வருந்தப் போனவன் கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்

- கம்பன் பூட்டியிருந்த வீட்டின் முன்பு கையில் அரவிந்தன் வைத்துச் சென்றுவிட்ட நோட்டுப் புத்தகத்தோடு தெரு வாசலில் நின்றாள்

பூரணி. அவள் நிற்பதைத் தன் வீட்டுவாசற்படியிலிருந்து பார்த்து விட்டாள் ஒதுவார்க் கிழவரின் பேத்தி காமு. அவள் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/91&oldid=555815" இலிருந்து மீள்விக்கப்பட்டது