பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப தி ப் பு ைர

சங்க கால இ ல க் கி ய ங் க ள் யாவும், பண்டிதர் களால் மட்டுமே, படித்து ரசிக்கப்பட்டு வந்தன. மற்ற வர்களால் இயலவில்லை. காரணம் : அந்த இலக்கியங் களின் புலமை நிறைந்த தமிழ் நடைதான்.

ஆகவே, அவற்றை எல்லாரும் விரும்பிப் படிக்கும் படி எளிய நடையில் வெளியிட விரும்பினோம். அவ் விருப்பத்தின் காரணமாகக் கலித்தொகை வெளி யிடப்பட்டது. தமிழ் வாசகர்கள், அதற்கு அளித்த பேராதரவு, ‘குறுந்தொகை’ யையும் வெளியிடத் துண்டியது.

எனவே, குறுந்தொகைக் காட்சிகள்’ என்ற இந் நூலே வாசகர்களுக்கு அளிக்கிருேம்.

திரு. ச க் தி தா ச ன் சுப்ரமணியன் அவர்கள் இங் நூலுக்கு உரை விளக்கம் எழுதியுள்ளார். கலித் தொகை க்கு அவர் எழுதிய விளக்கம் கண்டு வாசகர் கள் வியந்து பாராட்டினர். திரு. சக்திதாசன் சுப்ர மணியன் அவர்கள், திரு. வி. க. அவர்களின் வழித் தோன்றல்.

எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தபோதிலும், அதைத் தெளிவாகவும் அழகாகவும் விளக்கும் ஆற்றல் திரு. வி. க. அவர்களின் தனிச் சிறப்பு. அந்த ஆற்றலே அப்படியே பெற்றிருக்கிறார் திரு. சக்திதாசன் சுப்ரமணி யன். ஆகையில்ைதான், அவருடைய விளக்க உரை வாசகர்களால் வரவேற்கப்படுகிறது. தமிழ் வாசகர் கள் இந்நூலைப் படித்துப் பயன் அடைவார்கள் என நம்புகிருேம்.

சென்னை. 1

14–5–58 -முல்லை முத்தையா