பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கு று ங் தொ ைக க்

பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பல் நூல் மாலைப் பனை படு கலி மாப் பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு, பழி படர் உள் நோய் வழி வழி சிறப்ப, ‘இன்னள் செய்தது இது என, முன் நின்று, அவள் பழி துவலும், இவ் ஊர் : ஆங்கு உணர்ந்தமையின், சங்கு ஏகுமார்உளேனே.

-மதுரைக் காஞ்சிப் புலவன்

73. கனிந்த காதலும் கலங்கிய நெஞ்சும்

“ஐயோ பாவம்! வந்து வந்து போனன். ஒரு நாளா? இரண்டு நாளா? எத்தனையோ நாள் ! என்ன பணிவு 1 என்ன பணிவு ! எவ்வளவு நயமான பேச்சு !...”

‘இப்போ என்ன ஆச்சு ?”

‘ஆவது என்ன ? நாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. போய்விட்டான். மலேத்தேன் கேட்பாரற்றுக் கீழே வழிவது போல,’’

‘பாவம் இப்போது எங்கேயிருக்கிருனே ?’,

‘ஏன்

“என் நெஞ்சு கலங்குகிறது’

காரணம் ?”

இவ்வளவு அன்பாக வந்தவனே ஆதரியாமல் புறக்கணித் தோமே. அவன் என்ன ஆயினனே தெரியவில்லையே என்று.”

ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் ; பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என் நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை, வரை முதிர் தேனின் போகியோனேஆசு ஆகு எங்தை-யாண்டு உளன்கொல்லோ ? வேறு புலன் கல் காட்டுப் பெய்த ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.

-வருமுலையாரித்தி