பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ா ட் சி க ள் 105

‘இனி இங்கு வரவேண்டாம்’ என்றாள்.

‘ஏன் ?’ என்றான்.

‘எங்கள் தாய் இங்கே வருவாள். ஆதலின் வராதே”

“அப்படியால்ை எங்கே?’ என்று கேட்டு இழுத்தான்.

‘அங்கே’’ என்றாள். அதாவது என்ன? தினைப்புனத்துக்கு வரலாம் என்று பொருள்.

யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் கரும்பு மருள் முதல பைங் தாட் செங் தினே மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் படுகிளி கடிகம் சேறும்; அடுப்போர் எஃகு விளங்கு தடக் கை மலேயன் கானத்து ஆரம் காறும் மார்பினை, வாரற்கதில்ல ; வருகுவள் யாயே.

-கபிலர்

80. அமுதமும் அயல் வீட்டுப் பெண்ணும்

மலே நாட்டிலே மா மரங்கள் பழம் தந்து நிற்கின்றன. அந்த இனிய மாம்பழங்களே உண்டு களிக்கின்றன. வெளவால்கள்.

பக்கத்திலே நெல்லி மரங்கள். காய்த்து நிற்கின்றன. புளிப்பான அந்த நெல்லிக் காய்களையும் விடவில்லே அந்த வெளவால்கள். தின்கின்றன. பிறகு முள்ளின்றி வளர்ந்து ஓங்கிய மூங்கில் தோப்பிலே தலைகீழாகத் தொங்குகின்றன.

இத்தகைய மலேகாட்டு இளைஞன். ஒருத்தியைக் காதலித் தான். ‘விரைவில் வந்து மணந்து செல்வேன்’ என்றான். போனன். பொருள் சம்பாதிக்க.

அவளோ பருவம் வந்த பெண். அவனேயே நினைத்து கினைத்து ஏங்கினுள்.

‘வீட்டை விட்டு வெளியே வராதே’ என்று கட்டுப்பாடு செய்து விட்டார்கள். என்ன செய்வாள் பாவம் உள்ளேயே கிடந்து புழுங்கினுள்; துடித்தாள்.