பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 10 கு று ங் தொ ைக க்

84. கையுறை கொடுத்த காதலன்

பருவம் வந்த பெண் ஒருத்தி. காதல் கோயால் வாடு கிருள். அவளது வாட்டம் கண்டாள் தாய். என்னவோ தெரிய வில்லையே’ என்று கவலை கொண்டாள்.

‘பூசாரியை வரச் சொல்லு பூசை போட்டுக் கேட்போம்’ என்றாள்.

“சரி” என்றார்கள். அரளிப் பூவைக் கொண்டு வந்தார்கள், மாலை தொடுக்க.

“ஆமாம், அரளி மலர் பறித்து வந்தீர்களே! அங்கே அசோகு தழையின்றி கிற்கிறதே! அதைப் பார்த்தீர்களா ?” என்றாள் தோழி.

‘பார்த்தோம். அதற்கென்ன ?”

“என்னவா? தழை எங்கே ?”

“எங்கே?’ என்றாள் தாய்.

“அதைப் பறித்து உன் மகள் இடுப்பிலே கட்டிவிட்டான் ஒர் இளைஞன். இது தெரியாமல் ஏன் பூசை போடுகிறீர்கள் ?” என்றாள். மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ் அம் சில் ஒதி, அசை இயல், கொடிச்சி திருந்து இழை அல்குற்குப் பெருங் தழை உதவிச் செயலே முழுமுதல் ஒழிய, அயலது அரலே மாலை சூட்டி, ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே.

-கூடலூர் கிழார்

85. ஒடவா ? வாடவா ?

தினப்புனத்திலே காவல் புரிந்தாள் அவள். அப்போது வந்தான் அவன். பகல் கேரம் முழுதும் இன்புமாகப் பொழுது போக்கினன். போனன்.