பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கு று ங் .ெ த ா ைக க்

86. நீராடிய பெண்ணும் போராடிய கண்ணும்

அருவியிலே நீந்தி, விளையாடுகிறார்கள். இரண்டு பெண் கள். அப்படி ஒன்றும் வயதானவர்கள் அல்லர். இளம் பெண் களே. அப்போதுதான் பருவம் வரப் பெற்றவர்கள். நீரிலே குதிக்கிறார்கள் ; நீந்துகிறார்கள். ஒருவர் மேல் மற்றாெருவர் நீரை வாரி இறைக்கிறார்கள் ; ஒடுகிறார்கள் ; ஒடி வருகிறார்கள். பொத் தென்று நீரிலே குதிக்கிறார்கள். வாழை மரங்கள் அருவி நீரிலே மிதந்து வருகின்றன. அவற்றைப் பற்றி நீந்துகிறார்கள். இந்த சமயத்திலே வந்தான் ஓர் இளைஞன். இவர்களைப் பார்த்தான். பார்த்தபடியே கின்றுவிட்டான்.

“ஒருத்தி வாழையின் துனி பற்றி நீந்தினால் மற்றாெருத்தியும் அப்படியே நீந்துகிருள். அவள் அடி பற்றில்ை இவளும் அப் படியே பற்றுகிருளே ! அவள் ஆற்றுடன் நீரில் மிதந்து போனல் இவளும் போவாளோ?’ என்று சொல்லிக்கொண்டே கின்றான்.

நீண்ட நேரம் நீரில் கீந்தியதால் கண்கள் சிவந்தன. மோரிக் காலத்தில் மலரும் பிச்சிப் பூ மாதிரி கண்கள் சிவந்து விட்டனவே !’ என்றான்.

அவ்விருவரும் கரை சேர்ந்தனர். குளித்துவிட்டு வரும் அவர் தம் மேனி கண்டான்.

“என்ன அழகான மேனி. மழைக்குப் பின் தளிர் விட்டது மாதிரியல்லவா இருக்கிறது’ என்றான்.

தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும் ; கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்; புணே கைவிட்டுப் புனலோடு ஒழுகின், ஆண்டும் வருகுவள்போலும்-மாண்ட மாரிப் பித்திகத்து நீர் வார் கொழுமுகைச் செவ் வெரிக் உறழும் கொழுங் கடை மழைக் கண் துளி தலைத் தலைஇய தளிர் அன்னேளே.

-சிறைக்குடி ஆந்தையார்