பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 1 13

87 Buy pral Qu66.: 96._ பேருர் ஒன்றிலே திருவிழா நடக்கிறது. அக்கம் பக்கத் திலே உள்ள சிற்றுார் மக்கள் கூடி யிருக்கிரு.ர்கள். ஆடல், பாடல், வேடிக்கை, விளையாட்டு எல்லாம் நடக்கின்றன. ஒரே ஆர வாரம்.

‘திருவிழாவுக்குப் போய் வருவமா?’ என்று கேட்டாள் தோழி.

‘நான் வரமாட்டேன்’ என்றாள் அவள். “சும்மா வாடி, போய் வரலாம்’ என்று வற்புறுத்தினுள் தோழி. அப்பொழுதும் அவள் அசையவில்லை.

‘வா, வா’ என்று பல முறை வற்புறுத்தினள். “சரி” என்றாள்; அவளோ பருவம் வந்தவள். பக்குவ மடைந்த பெண். இருவரும் தயாராயினர். புறப்பட்டனர். புறப் பட்டபோது நல்ல நிமித்தங்கள் தோன்றின. நல்ல சகுனம் ஏற் பட்டது; பெரியவர்கள் வாயிலிருந்து மங்கலச் சொற்கள் வந்தன. இருவரும் சென்றார்கள் திருவிழாவுக்கு. அங்கே துணங் கைக் கூத்து நடந்து கொண்டிருந்தது. இவளும் போய் கின்றாள். கட்டழகன் ஒருவன் வந்தான் ; கண்டான் ; கை கோத்தான். இருவரும் துணங்கை யாடினர்; பிறகு என்ன ? கண்ணுேடு கண் பேசிற்று. உள்ளமும் உடலும் ஒன்றின. இன்பம் ! இன்பம் ! -

பிறகு பல நாட்கள் இருவரும் சந்தித்தனர் இரகசியமாக, இன்பம் துய்த்தனர்.

‘கலியாணம் எப்பொழுது?’ என்றாள் அவள். போய் வருகிறேன்’ என்றான். “எதற்கு ?” என்றாள். பொருள் கொண்டு வர’ என்றான். சரி. சிக்கிரம் வா’’ ‘நொடியில் வருவேன் ’’ போனன். நாட்கள் பல சென்றன. வரவேயில்லை. வருங்

8