பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 129

பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்

அன்றை அன்ன நட்பினன் ;

புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே.

-கபிலர்

105. மண் தோண்டினன் மணி கிடைத்தது

அவளது காதலன் வெளியூர் சென்றிருக்கிருன். அந்த நேரத்திலே அயலார் பலர் வருகின்றனர். பெண் கேட்கின்றனர் ; “சரி” என்று பெற்றாேர் கூறிவிட்டால் என்ன செய்வது ? அதை எப்படியாவது தடுக்க வேண்டும். வழி என்ன ? வழி ஒன்றே. அவளது காதலைத் தாயிடம் தெரிவிப்பது? எப்படித் தெரிவிப் பது ? பேச்சுடன் பேச்சாகத் தெரிவிக்கிருள் தோழி.

“வேடன் ஒருவன் கிழங்கு தோண்டின்ை மலையிலே. அங்கே மணியும் கிடைத்தது அவனுக்கு. அந்த மாதிரி வேட்டை மேல் வந்தான் அவன். நீ கிடைத்தாய். உனது கூந்தலைத் தடவி ேைன 1 பருவம் வந்ததும் என் வீட்டுக்கு வா. இல்லறம் நடத் தலாம் என்று சொல்லிப் போனனே அவன் இப்போது எங்கே இருக்கிருனே ?’ என்றாள். இன்று யாண்டையனே - தோழி! - குன்றத்துப் பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினெடு, கண் அகன் து மணி, பெறுTஉம் நாடன், ‘அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி ! எம்மில் வருகுவை நீ எனப் பொம்மல் ஓதி நீவியோனே ?

106. மாறுதலும் ஆறுதலும்

‘போய் வருகிறேன்” என்றான் அவன். அது கேட்டதுமே அவள் வருந்தினள். தோள் நெகிழ்ந்தது. வளைகள் கழன்றன. கண்கள் நீர் சொரிந்தன. அழகு இழந்தன.

9