பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 32 கு று க் ெத ைக க்

109. உலகமே பெயர்ந்தாலும் உள்ளம் மாருது !

“என்னடி இப்படி வம்பு பேசுகிறார்களே நமது ஊரார் ?” என்று வருந்தினுள் அவள்.

“அவர்கள் என்ன வேண்டுமாலுைம் பேசிக் கொள் ளட்டுமே. அதல்ை நிலைமை மாறிவிடப் போகிறதா ? அவன் மீது நீ கொண்ட காதல் ஒடி ஒளிந்து விடுமா ? இந்த உலகமே இடம் வலமாக மாறிய போதிலும் சரியே. தீயும் நீரும் தம் இயற்கை மாறிய போதிலும் சரியே. கடல் தன் எல்லே மாறினும் சரியே. உனது காதல் மாறப் போவதில்லே. ஏன் அஞ்சு கிறாய்?’ என்றாள் தோழி.

நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும், இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லே தோன்றினும், வெவ் வாய்ப் பெண்டிர் கெளவை அஞ்சிக் கெடு எவன் உடைத்தோ - தோழி! - நீடு மயிர்க் கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி காந்தள்.அம் சிறுகுடிக் கமழும் ஓங்கு மலே நாடனெடு அமைந்த நம் தொடர்பே?

-மதுரைக் கொல்லன் புல்லன்

110. வம்பும் வளியும்

பருவப் பெண் அவள். வீட்டுக்குள்ளே அடை பட்டுக் கிடக்கிருள். வெளியே காதலன் வந்து காத்திருக்கிருன். அந்த நேரத்திலே காற்று வீசுகிறது. பெருங்காற்று. புழுதியைக் கொண்டு வந்து கொட்டுகிறது. பனேக மரத்தின் ஒலேக் குருத் தெல்லாம் அந்தப் புழுதி முடிப் போகிறது.

  • அடேயப்பா ! இந்த மாதிரியல்லவா இருக்கிறது இந்த ஊரார் பேசும் வம்புப் பேச்சு” என்றாள் தோழி.