பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ா ட் சி க ள் 135

114, ப லி யும் கி லி யு ம்

பூசாரி பூசை போட்டுக் கொண்டிருக்கிருன். உடுக்கும், பம் பையும் ஒலிக்கின்றன. ஆட்டுக் குட்டியைப் பலியிட்டு வைத் திருக்கிறது. பல்வகைச் சோறும் பலியாக இருக்கிறது.

எதிரே அவள் உட்கார்ந்திருக்கிருள். அவளது நெற்றியைத் தடவித் தடவிப் பேயோட்டுகிருன் பூசாரி.

கண்டாள் தோழி. மெதுவாக வந்தாள்.

‘ஐயா, பூசாரியே! ஒன்று கேட்கிறேன். தயவு செய்து கோபிக்கக் கூடாது. இவ்வளவு பலியிட்டு இருக்கிறீர்களே ! இது யாருக்கு ?”

‘இவளைப் பற்றியிருக்கும் பேய்க்கு”

பேய் உண்ணுமோ !”

ஆமாம்”

“அப்படியானல், இவளைப் பிடித்து ஆட்டும் காதல் பேய் அந்த மலே நாட்டவனது மார்புதான். அது இதை உண்ணுமா ?” என்று கேட்டாள்.

முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவல் ஒம்புமதி; வினவுவது உடையேன்: பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு, சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் விே, வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய விண்தோய் மா மலைச் சிலம்பன் ஒண் தார் அகலமும் உண்னுமோ, பலியே?

-வேம்பற்றுர்க் கண்ணன் கூத்தன்

115. காதலும் காந்தளும்

|

‘போய் வருகிறேன்’ என்றான் அவன். போய் வா’ என்றாள் அவள். ‘வருந்தாதே’ என்றான்.