பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கு று ந் தொ ைக க்

னின் நலத்தை யெல்லாம் கெடுத்துவிட்டான் அவன். ஆனால் நீயோ அந்த வாழையை அடியோடு பெயர்த்துக்கொண்டு வந்து விட்டாயே’ என்று சொல்கிருள்.

‘நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின் கயன் இலர் ஆகுதல் நன்று’ என உணர்ந்த குன்ற நாடன் தன்னினும், நன்றும் நின் நிலை கொடிதால் . தீம் கலு.ழ் உந்தி! கம் மனே மட மகள், ‘இன்ன மென்மைச் சாயலள் அளியள்’ என்னுய், வாழை தங்தனையால், சிலம்பு புல்லெனவே.

-அம்மூவன்

129. வருத்தமும் பொருத்தமும்

காட்டிலே உள்ள வேடர்கள் என்ன செய்வார்கள் ? காட்டுப் பசுக்களின் கூட்டத்திலே போய் விரட்டுவார்கள்; கலைப் பார்கள். அப்போது அவற்றின் கன்றுகள் பயந்து ஒடும். அவற் றைப் பிடித்து வந்து வீட்டிலே வளர்ப்பார்கள்.

தன் இயற்கைக்கு மாறுபட்டு இருப்பினும் கன்று என்ன செய்யும் ? அவர் தம் வீட்டில் உள்ளாரைத் தழுவி வளரும்.

இதை எடுத்துக் காட்டினுள் அவள் தன் தோழிக்கு. ஏன் ? அவளது காதலன் வரவில்லை. ‘சொன்னபடி வரவில்லை, பார்த் தாயா?” என்று கோபித்துக் கொண்டாள் தோழி. அவன் உன் இயல்புக்குச் சிறிதும் பொருந்தாதவன்” என்றாள்.

அவன் என் இயல்புக்குப் பொருந்தாவிடில் அவன் இயல் புக்குத் தக்கபடி நான் நடப்பேன். அவன் இங்கு வராவிட்டால் நாம் அங்கு செல்வோம்’ என்றாள் அவள். அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி கர்னவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, கானம் கண்ணிய சிறுகுடிப் பட்டென, இளையர் ஒம்ப மரீஇ, அவுண் கயங்து, மன உறை வாழ்க்கை வல்லியாங்கு,