பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 147

மருவின் இனியவும் உளவோ ? செல்வாம் - தோழி! - ஒல்வாங்கு நடந்தே.

-ஐயூர் முடவன்

130. களவும் காரிகையும்

“இரவு நேரத்திலே வருகிருன் அம்மா உன் காதலன் ! மலையிலே விளைந்த சந்தனத்தை மார்பிலே பூசி வருகிருன். கம கம’ என்று வாசனை வீசுகிறது. சுனேயிலே மலர்ந்த மலர்களேச் குடி வருகிருன். இரவு உன்னுடன் இன்பமாக இருக்கிருன். இரவோடு இரவாகத் திரும்புகிருன். அவன் வரும் வழியோ ஆபத்தானது. புலிக் கூட்டம் நிறைந்த வழி. இந்த மாதிரி எத்தனை நாள் வந்து போக முடியும் ? வழியில் ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடப் போகிறதே என்று பயமாக இருக்கிறது. இந்த இரகசியத்தை எவ்வளவு நாளேக்கு மூடி வைக்க முடியும் ? அம்மா விடம் சொல்லிவிட நினைக்கிறேன். அதுதான் நல்லது” என்றாள் தோழி. மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும் . மடம் ஆர் அரிவை ! நின் மார்பு அமர் இன் துணை : மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, செங் கண் இரும் புலி குழுமும் ; அதனல், மறைத்தற் காலேயோ அன்றே , திறப்பல் வாழி - வேண்டு, அன்னே ! . நம் கதவே.

131. எ ப்போ வ ரு வா ரோ?

‘வருவேன்’ என்றான். *எப்போ?’ என்றாள். “பனிக்காலம் வரும்போது’ என்றான்.