பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ா ட் சி க ள் 149

‘சந்திரனேக் கண்ட உடனேதான் கடல் பொங்கி ஆரவாரம் செய்யும். மற்ற நேரத்தில் அடங்கி இருக்கும். அந்த மாதிரி அவரைக் கண்டதும் காதல் பொங்கும். காணுதபோது அடங்கி யிருக்கும்.”

“மலேயிலேதான் அருவியானது குதித்து ஒடி ஒலிக்கும். இல்லாத இடத்திலே அமைதியாக ஒடும்.

“சூரியகாந்தியானது சூரியனேயே பார்த்திருக்மும். அந்த மாதிரி அவன் வ ரு ம் திசையையே நோக்கியிருப்பேன். அவனேயே எண்ணியிருப்பேன்’ என்றாள். எழுதரு மதியம் கடற் கண்டாஅங்கு ஒழுகு வெள் அருவி ஓங்கு மலேநாடன் ஞாயிறு அனேயன் - தோழி ! - நெருஞ்சி அனேய என் பெரும் பணத்தோளே.

-மதுரை வேளாதத்தன்

133. க ள் ளி எ ன் கா த லி!

அவனும் அவளேக் காதலித்தான். அவளும் அவனைக் காதலித்தாள். இரவு நேரத்திலே இருவரும் சந்தித்தார்கள். இன்பமாக இருந்தார்கள். இது எவருக்கும் தெரியாது.

இரவிலே மலர் கொண்டு வருவான் அவன். அவளது கூந்தலிலே சூட்டுவான். மகிழ்வான். இன்பம் துய்ப்பான். வைகறையிலே எழுவான். போய்விடுவான். அவளும் எழுவாள். அவன் சூட்டிய மலர்களைக் களைந்து எறிவாள். கூந்தலைச் சீவி முடிவாள். முகத்தை கன்றாகக் கழுவுவாள். கெற்றியிலே சாந்து இடுவாள். இரவு நடந்தது எவரும் அறியா வகையில் கடந்து கொள்வாள்.

பகல் நேரத்திலே அந்த இருவரும் இருப்பார்கள். ஆனல் அவளோ தனது காதலே வெளியே காட்டிக் கொள்ளவே மாட் டாள். அவன் யாரோ ? அவள் யாரோ ?’ என்கிற மாதிரி நடந்து கொள்வார்கள். இரவு வந்தாலோ-இருவரும் இணை பிரியாக் காதலர் ! இதை எண்ணிப் பார்த்தான் அவன்.