பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 151

உயங்கு உயிர் மடப் பிடி உலேபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் மா மலைநாடன் கேண்மை காமம் தருவது ஓர் க்ை தாழ்ந்தன்றே.

-பெருந்தோட் குறுஞ்சாத்தன்

135. நேரில் காணேன் நெஞ்சில் காண்பேன்

இன்னும் அவர் வரவில்லையே! சொல்லடி, தோழி. நான் என்ன செய்வேன்! என்னல் தாங்க முடியவில்லையே! துன்பம் பொறுக்க முடியவில்லையே! உயிரை விட்டு விடலாமா! அதற்கும் பயமாக இருக்கிறதே! ஏன் அவர் வரவில்லை? ஊரார் கூறும் அலர் கண்டு அஞ்சி விட்டாரோ? இரவு நேரத்திலே எல்லாரும் தூங்கியபின் என் கெஞ்சிலே காண்கிறேன் அவரை ஆல்ை நேரில் காணமுடியவில்லையே? என்ன செய்வேன்?”

உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே: அருங் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன் தலைப் பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்; அன்னே! இன்னும், நல் மலே காடன், ‘பிரியா நண்பினர் இருவரும் என்னும் அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன் துஞ்சு ஊர் யாமத்தானும், என் நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.

-மாங்குடி கிழார்

136. ஆசையும் மணி ஓசையும்

பனை மரத்திலே கூடு கட்டி வாழ்கிறது அன்றில். ஆணும் பெண்ணுமாக. அன்புடன் இணைபிரியாது இருக்கிறது. பெண் பறவை சூல் கொண்டு இருக்கிறது. இதுதான் முதல் சூல். இரவு நேரம். பெண் அன்றில் அழைக்கிறது ஆண் பற