பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 159

நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ? . வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்

இன்னுது இருந்த இச் சிறுகுடியோரே.

-மிளைவேள் தித்தன்

145. அப்புறம் அரை நாள் வாழ்வும் வேண்டேன்!

குறிஞ்சி நாட்டு இளைஞன் ஒருவன். செல்வர் குடியிலே பிறந்தவன். ஆற்றின் கரையருகிலே ஒரு பெண்ணேக் கண் டான். கண்டதும் காதல் கொண்டான். அவளோ, கண்டவர் காமுறும் காரிகை. குறு நகையாள் ; இளவழகி.

அவளேயே கினைத்து நினைத்து ஏங்குகிருன் குறிஞ்சி நாட்டு இளவல். ஊண் செல்லவில்லை; உறக்கம் கொள்ளவில்லை. உன் மத்தன் ஆன்ை. கண்டான் அவனது தோழன்.

“என்ன இது? மலே நாட்டு வீரன் செய்யும் காரியமா? எங்கேயோ, எவளோ ஒருத்தியைக் கண்டானம். காதல் கொண் டாம்ை. கசிந்து உருகுகிருன். பயித்தியம் பிடித்துவிட்டதா?” என்றான்.

‘நண்பா’ என்ன சொல்வேன் உனக்கு என் நெஞ்சு என் வச மில்லை. அவள் கொண்டு போய்விட்டாள். என்ன அழகு 1 என்ன அழகு 1 என் கண் முன் அப்படியே நிற்கிருளடா அவளிடம் - ஒரு நாள் - ஒரு நாள் - போதும் - போதும். அப்புறம் எனக்கு இந்த உயிரே வேண்டியதில்லை. அரை நாள் கூட வாழ வேண் டாம். சாகத் தயார்.”

கேளிர்! வாழியோ, கேளிர் நாளும் என் நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஒதிப் பெருங் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம் ஒரு நாள் புணரப் புணரின், அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.

-நக்கீரர்