பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கு று ங் .ெ த ைக க்

149. சென்றவரும் கண்டவரும்

அவன் மீது காதல் கொண்டாள் அவள். அவனும் அவளேக் காதலித்தான். இது பெற்றாேருக்குத் தெரியாது.

“எங்கேயாவது ஒடிப் போகலாமா ?’ என்று கேட்டாள்

அவள.

“எங்கே ?’ என்றான் அவன்,

  • நீ எங்கே அழைத்துச் சென்றாலும் சரி” என்றாள்.

“நிஜமாகவா ?”

“சத்தியமாக’

‘அப்படியானல் சரி’

“புறப்படவா?”

“புறப்படு’

பட்சிகள் இரண்டும் புறப்பட்டன. அப்படி ஒன்றும் அதிக வயது ஆகவில்லே. இளம் வயதுதான். காலிலே கட்டிய வீரக் கழலை இன்னும் அவிழ்க்கவில்லே அவன்.

அவளோ தன் கால் சிலம்பு கழற்றவில்லை. கரும்பு கையிலே கொண்டு செல்பவனேப்போல் சென்றான். -

பாலே நிலம். அதைக் கடந்து செல்கின்றனர். எவரும் அஞ்சும் பாலே. இளங் கன்றுகள் இரண்டும் பய்ம் அறியாது செல்கின்றன. எதிரே சிலர் வந்தனர்; கண்டனர்.

போர்த்தியா ?”

‘பார்த்தேன்; சிறு வயசு ; போகிறார்கள்’’

“அவள் காலைப் பார்த்தியா ?”

போர்த்தேனே !’

  • என்ன கண்டாய் ?’’

‘கால் சிலம்பு கழற்றவில்லை’

‘அவன் காலிலே ?’’

‘வீரக் கழல் கண்டேன்’

  • கையிலே?...”