பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 7

காதலனைப் பிரிந்ததால் இரவு முழுதும் தூக்கமின்றி இருந்த அவள் இதைப் பார்க்கிருள்; புலம்புகிருள்.

‘என்னுடன் இருந்து இன்பம் தர வேண்டிய இந்தக் குளிர் காலத்திலே என்னேப் பிரிந்து போய் விட்டாரே ! போனவர் விரைவில் வரக் கூடாதோ ! எவ்வளவு நாளாயின. 1 இன்னும் எவ்வளவு நாள் நான் தனிமையில் வாடுவேன் ; தவிப்பேன் ; கண்ணிர் உகுப்பேன் ?’

அம்ம வாழி, தோழி! காதலர், நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப, தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் பனி படு நாளே, பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுபவே!

-காவன்முல்லைப் பூதனர்

| 152. பாலும் பாழும்

“அதோ பார்” என்றாள் அவள். “எதோ ?’ என்றாள் தோழி. அங்கே நின்று கொண்டிருந்த பசுவைச் சுட்டிக் காட்டினள். நல்ல பசு. கொழு கொழு என்று வளர்ந்த பசு. கன்றாகப் புல் மேய்ந்து, பசியாறி, வயிறு கிரம்பி வருகிறது, தன் கன்றைத் தேடி, கன்றைக் காணுேம். கன்றை நினைக்கிறது பசு நினைத்த உடனே அதன் மடிக் காம்பிலிருந்து பால் சொரிகிறது. அவ்விதம் சொரிந்த பால், கீழே ஒடுகிறது; கால் எடுத்து ஒடுகிறது. அதைக் காட்டுகிருள். -

‘ஐயையோ 1 கன்றும் குடிக்கவில்லை, கலத்திலும் கொள்ள வில்லையே பால் iணுகிறதே!’ என்றாள் தோழி.

“கன்றும் உண்ணுது...கலத்தினும் படாது...” என்று முணு முணுத்தது அவளது வாய்.

“பாழாகிறதே! பால் பாழாகிறதே !’ என்றாள் தோழி, “அது போல...’ என்றாள் அவள். “அது போல என்ன ?”