பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 கு று ங் .ெ த ைகக்

‘எனக்கும் ஆகாது...என்னைக்கும் உதவாது...’ என்று பாடினுள்.... அவள்.

‘'எது ?’ என்று கேட்டாள் தோழி. “என் கவினே’ என்றாள் அவள். “ஆமாம் ! ஐயோ! உன் அழகு பாழாகிறதே. உடம்பு பசலே கொண்டு விட்டதே. உனக்கும் பயனில்லே. உன் காதலனும் உன் அழகை அநுபவிக்கவில்லேயே 1’’

“அவர் தான் இல்லையே!” என்று கூறிப் பெருமூச்சு விட் டாள் அவள்.

“மாந்தளிர் போன்ற உனது மேனியழகை அவன் இன்புற வேண்டும். அது கண்டு நீ இன்புற வேண்டும். இரண்டும் இல்லையே. பாழாகிறதே!” என்றாள் தோழி.

மெல்லிய குரலில் அவ்விருவரும் பாடினர். திரும்பத் திரும் பப் பாடினர் ; மாறி மாறிப் பாடினர்.

“கன்றும் உண்ணுது...கலத்தினும் படாது...” ‘எனக்கும் ஆகாது என்னைக்கும் ஆகாது.”

கன்றும் உண்ணுது, கலத்தினும் படாது, நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காங்கு, எனக்கும் ஆகாது, என்னேக்கும் உதவாது, பசலை உணரீயர் வேண்டும் திதலை அல்குல் என் மா மைக் கவினே.

-வெள்ளி வீதியார்

153. முட்டவோ ? மோதவோ ?

“ஐயோ! நான் என்னடி செய்வேன்? என்னல் தாங்க முடிய வில்லையே t’ என்றாள்.

“என்னடி! என்ன ?’ என்றாள் தோழி.

‘சுவர் மீது நறுக்கு நறுக் கென்று முட்டிக் கொள்ளட்டுமா?’

‘பைத்தியமா ?”

கல்லேத் தூக்கித் தலையிலே மொட் டென்று இடித்துக் கொள்ளட்டுமா ?”