பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கு று க் .ெ த ைக க்

பிரிந்து இவள் வருந்துவாளே என்ற இரக்கம் இருந்தால் இப்ப டிக் கல்நெஞ்சனுகப் போவாரா?

‘இந்தமாதிரி மனிதர்தான் அறிவுடையவராம். இருக்கட் டும் இருக்கட்டும். இவர் அறிவுடையவர் என்றால் அவ்விதமே இருக்கட்டும். நாம் அறிவில்லாதவராகவே இருப்போமே.”

அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து பொருள் வயிற் பிரிவோர் உரவோராயின் உரவோர், உரவோர் ஆக மடவம் ஆக, மடங்தை நாமே!

-கோப்பெரும் சோழன்

157. பல்லியும் பாலையும்

“ஏன் வாட்டமா யிருக்கிறாய்?’’

ஒன்று மில்லையே!”

‘ஒன்று மில்லையா? கண் குழி விழுந்து கிடக்கிறது’

  • ராத்திரி யெல்லாம் தூக்கமில்லை’

“ஏன் தூக்கமில்லை?”

கொசுக்கடியா?”

‘இல்லே ; இல்லை’

புழுக்கமோ?”

‘அதெல்லாம் ஒன்றுமில்லை’

“அப்போ! தூக்கம் வராததற்குக் காரணம்?’’

காரணத்தை யெல்லாம் அப்படியே புட்டுச் சொல்ல வேண்டுமாக்கும்’

ஒ! அப்படிச் சொல்லு, காதலனே நினைத்து வருத்தமோ! ஐயோ! பாவம். சிறிசு! நீ என்ன செய்வாய்? காதலனுடன் சுகித்திருக்க வேண்டிய வயசு, அவனே? பொருள் தேடி வர வெளியூர் போயிருக்கிருன். கவலைப்படுவது சகஜம் தானே! அதனுல்தான் தூக்கம் வரவில்லை’ என்றாள் தோழி.

அவள் கண்ணிர் சொரிந்தாள். முத்து முத்தாக நீர்த்திவலே கள் உருண்டு ஓடின.