பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 1 83

அரிய கானம் சென்றாேர்க்கு எளிய ஆகிய தட மென் தோளே.

-மதுரை மருதன் இளநாகனர்

163. பாலை நிலப் புரு

பாலே நிலத்திலே வெயிலின் கொடுமை தாங்க இயலாது பெண் யானே துடிக்கும். அப்போது ஆண் யானே என்ன செய் யும்? மரப் பட்டையை உரித்துக் கொடுக்கும்.

அவ்விதம் பட்டை உரிக்கப் பெற்ற மரக் கிளைகளிலே ஆண் புருக்கள் அமர்ந்திருக்கும். பெண் புருக்களை அழைக்கும்.

“இந்த மாதிரியான சிறு ஊர்களிலே அவர் தங்கிவிட் டாரோ?” என்றாள் அவள்.

‘ஏன் ?’ என்று கேட்டாள் தோழி.

வெளியூர் செல்கிறேன் என்று சொன்னல், வேண்டாம் என் பேனே என்று பயந்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போனுரே அதல்ைதான் கேட்கிறேன். கோபித்துக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டாரோ I அல்லது மறந்தே போனரோ ! அப்படி மறந்தாலும் அந்தப் புருக்களைக் கண்டாவது கினேவு வரும் அல்லவா ?”

கான யானே தோல் நயந்து உண்ட - பொரிதாள் ஒமை வளி பொரு நெடுஞ் சினே அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் அத்தம் கண்ணிய அம் குடிச் சீறுார்ச் சேர்ந்தனர் கொல்லோ தாமே - யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்குச் சொல்லாது ஏகல் வல்லுவோரே.

-குடவாயிற் கீரனக்கன்