பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கு று ங் .ெ த ைக க்

| 164. மருந்தும் மனமும்

வெளியூர் செல்ல நினைக்கிருன் அவன். பொருள் தேடு வதற்காக, காதலியைப் பிரிந்து செல்வது எப்படி என்று யோசிக் கிருன். கவலை கொள்கிருன்.

‘இன்பத்தின் சுரங்கம் இவள் செல்வமிவள். எனது காம நோய்க்கு மருந்து இவள். இவளே எப்படிப் பிரிவேன்’ என்று ஏங்குகிருன்.

மருந்து எனின் மருந்தே ; வைப்பு எனின் வைப்பே - அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலே, பெருங் தோள், நுணுகிய நுசுப்பின், கல் கெழு கானவர் நல்குறு மகளே.

-கருவூர் ஓதஞானி

165. நெஞ்சும் நினைவும்

பொருள் தேடும் பொருட்டு வெளி நாடு செல்ல நினைத் தான் அவன். காதலியைப் பிரிந்துபோக வேண்டுமே ! இதை நினைத்தான். மிக வருந்தின்ை. தன் நெஞ்சுக்குச் சொல்கிருன் :

பொருள் தேட வேண்டியதுதான். பொருள் இன்றேல் ஈகை இல்லை. இன்பம் துய்த்தல் இல்லே. எனவே பொருள் அவ சியம். பொருள் தேடும் பொருட்டுப் பிற நாட்டுக்குப் போக வேண்டியதும் அவசியம்.

பொருள் தேடும் ஆசையைக் கொடுத்த நெஞ்சே! இன் னும் என்ன செய்ய இருக்கிறாய் பொருள் தேடும் பொருட்டு என்னே மட்டும் வெளி நாடுகளுக்கு அனுப்பப் போகிருயா ? அல்லது எனது அருமைக் காதலியையும் அனுப்பப் போகிருயா? சொல்’’

‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்’ எனச் செய் வினே கைம்மிக எண்ணுதி ; அவ் வினைக்கு