பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 187

168. பாலையும் யானையும்

‘அழாதே கண்ணிரைத் துடை” என்றாள் தோழி. ‘நான் என்னடி செய்வேன்? அவர் என்னே மறந்தே போனுரே’

‘வருந்தாதே. அவர் உன்னே ஒருநாளும் மறக்க மாட்டார். அப்படி மறந்தாலும் அவர் சென்ற வழி இருக்கிறதே! அது அவருக்கு உனது நினைவு உண்டு பண்ணும்’

“அப்படியா 1 அது எப்படி ?” - ‘அந்த வழியிலே யானைகள் ஏராளமாகத் திரியும். ஆணும்

பெண்ணுமாகத் திரியும்’

    • g_t “வெயில் தாங்க முடியாது நீர் வேட்கை கொண்டு திரியும் பெண் யானே’’

‘உம். ஆண் யானை என்ன செய்யும் ?” ‘மரப் பட்டையைப் பிளந்து தன் பெண் யானேக்கு ஊட்டும்’ “அதைக் கண்டதும் அவருக்கு உன் கினேவு வந்துவிடும். விரைவில் வருவார். வருந்தாதே.

காதலனைப் பிரிந்து வருந்தும் காதலியை இவ்வாறு தேற்றி ள்ை அவளது தோழி. நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினையா அம்பொளிக்கும் அன்பின தோழி! அவர் சென்றவாறே !

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

| 169. வாகையும் வருத்தமும்

‘ஏன் இப்படி வருந்துகிறாய் ?” ‘அவர் சென்ற வழியை நினைத்தேன். வருத்தம் ஏற்பட்டது” ‘அப்படியா !”