பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 கு று ங் தொ ைக க்

“கடந்து செல்வதற்கு மிகவும் கஷ்டமான பாலே நிலம் என் பார்களே. பெருங்காற்று அனல் கொண்டு வீசும் என்பார்களே ! வாகை மரத்திலே உள்ள முற்றிய காய்கள் ஒலிக்கும் என்பார் களே! என்று எண்ணினேன். கண்ணிர் வந்தது. ஐயோ! அந்த வழியிலே அவர் எப்படிக் கஷ்டப்படுகிருரோ என்று நினைத்தேன், வருத்தமாயிருக்கிறது” என்றாள்.

வெந்திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் மலே யுடை அரும் சுரம் என்ப நம் முலே யிடை முனிகர் சென்றவாறே.

-ஒளவையார்

170. அணிலும் அணங்கும்

பாலே நிலம். அதிலே குடியில்லாத வீடு ஒன்று. அந்த வீட் டின் முற்றத்திலே அணில் ஒன்று விளையாடுகிறது எப்படி!

மக்கள் அதிகம் இல்லாதது பாலே. அதிலும் துறந்த வீடு. அந்த வீட்டிலே அணில் விளையாடுகிறது. எப்பேர்ப்பட்ட தனிமை !

இந்த அணில் மாதிரி இருக்கிருள் ஒருத்தி. எப்போது ? காதலன் இல்லாதபோது.

காதலன் அருகில் இருந்து விட்டால் ஒரே குதுாகலம். மகிழ்ச்சி. திருவிழாதான்.

இதைத்தான் ஒரு காதலி சொல்கிருள். யாரிடத்திலே? தன் தோழியிடத்திலே.

‘ஏனடி? ஒரு மாதிரியாக இருக்கிறாய்?’ என்று கேட்டாள். “மாதிரி என்ன ? எப்போதும் போல்தான் இருக்கிறேன். அவர் இருந்தால் திருவிழாபோல் குது கலமாக இருப்பேன். இல்லாவிட்டால், தனி வீட்டிலே அணில் விளையாடுவதுபோல் இருப்பேன்’ என்கிருள்.