பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 189.

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற ; அத்தம் கண்ணிய அம் குடிச் சீறார் மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற் புலப்பில் போலப் புல்லென்று அலப்பென் - தோழி ! - அவர் அகன்ற ஞான்றே.

-அணிலாடு முன்றிலார்

171. அரவும் அவதியும்

‘வெளியூர் போகிறேன்’ என்று சொன்னல் அவள் வருந்து வாள் என்று தெரியும் அவனுக்கு. எனவே, அவளிடம் சொல் லவில்லை. சொல்லாமலே போய் விட்டான்.

அவள் என்ன நினைத்தாள்? “நம்மைவிட்டு இவன் எங்கே. போகப் போகிருன்?’ என்று கினைத்தாள். நம்மிடத்திலே இவ்வளவு அன்பு கொண்டிருக்கிருன். பிரிந்திருக்க இவல்ை முடியாது’ என்று எண்ணினுள்.

இப்படியாக இந்த இரண்டு பேரும் ஒருவரைப் பற்றி மற் றொருவர் தவருகவே எண்ணினர். -.

அதன் பலன் என்ன? அவன் பிரிந்தான். அவள் வருந்தினுள்.

‘நல்ல பாம்பு தீண்டினல் எப்படியோ அப்படிப்பட்ட துன்பத் தில் அவதிப்படுகிறேனே’ என்று வருந்தினுள் அவள்.

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே; ஒள்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே: ஆயிடை, இருபேர் ஆண்மை செய்த பூசல், நல்அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.

-ஒளவையார்