பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J Q0 கு று ங் .ெ த ைக க்

172. 6 வருத்தம்

பகல் நேரத்திலே வந்து போய்க் கொண்டிருக்கிருன் அவன்’ அப்போதும்கூட அவள் வருந்துகிருள். அவன் வருவதற்கு நேர மானுல் ஏங்குகிருள். அந்த ஏக்கத்தினலே அவளது மேனி பசலே பாய்கிறது.

அது கண்டாள் தோழி.

“ஐயோ! இவள் இப்படி வருந்துகிருளே. மெலிந்து போகி ருளே. இவளுக்கு இதமான அந்தச் சொல்லே அவர் சொல் லாரோ? விரைவில் வந்து மணப்பேன் என்று சொல்ல மாட் டாரா? சொன்னல் என்ன? அது கேட்டு இவள் ஆறுதல் அடைவாளே!’ என்கிருள்.

“தாதின் செய்த தண் பனிப் பாவை காலே வருந்தும் கையாறு ஒம்பு’ என, ஒரை ஆயம் கூறக் கேட்டும், இன்ன பண்பின் இன பெரிது உழக்கும் நன்னுதல் பசலே நீங்க, அன்ன கசை ஆகு பண்பின் ஒரு சொல் இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?

-பூங்கணுத்திரையார்

173. கூறியதும் சிறியதும் : ;

பொருள் தேடி வர எண்ணின்ை அவன். அவளிடம் சொன்னல் போகவிட மாட்டாள். அவளிடம் சொல்லிக்கொள் ளவில்லே, போய்விட்டான். இதை அறிந்தாள் தோழி. அவ வரிடம் வந்தாள். -

  • உன்னிடத்தில் கூடச் சொல்லிக் கொள்ளாமல் போய் விட் டாரே!” என்றாள்.
இதுதான் எனக்கும் தெரியுமே. நீ வந்துதான் சொல்ல வேணுமா? எவ்வளவோ பேர் வந்து,:சொல்லிவிட்டனர். நீ