பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 193

பைதல் ஒரு கழை டிேய சுரன் இறந்து, எய்தினர்கொல்லோ பொருளே . அல்குல் அவ் வரி வாடத் துறந்தோர் வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?

-கச்சிப்பேட்டு கன்னகையார்

177. அருளும் பொருளும்

‘பொருள் தேடப் போகிறேன்” என்றான் அவன். அவளுக் குக் கோபம் வந்துவிட்டது.

“இந்த உலகிலே பொருள் ஒன்றுதான் எல்லாமோ? அருளே இல்லையோ? என்றாள். -

“அவருக்கு அருள் உண்டேல் பிரியார். பொருளே பெரி தென்று கருதினால் பிரியட்டும்’ என்பது கருத்து.

பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி துதை மென் துாவித் துணைப் புறவு இரிக்கும் அத்தம் அரிய என்னர், கத்துறந்து, பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ் உலகத்துப் பொருளே மன்ற பொருளே, அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

-வெண்பூதி

178. பிச்சியும் பெண்ணும்

பிச்சி என்பது மாரிக்காலத்திலே மலர்வது. சிவந்திருக்கும். அதைக் கூடை கூடையாக நிரப்பி அள்ளிக் கொட்டியது போலி ருக்கிறதாம் அவளது மேனி. எவளது மேனி? காதலியின் மேனி. காதலன் ஒருவன் சொல்கிருன். அது மாத்திரம் அல்ல. தெப்பம் போலிருக்கிறதாம் அவளது தோள். அவளேப் பிரிவது எப்படி? என்று கேட்கிருன். கிச்சயமாக முடியாது; கூடாது. என்பது தானே பதில்?

13