பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 197

‘அந்த மலை நாடுதான்’

‘அப்போ அங்கே போய்விட்டாளா ? .

“ஆமாம். காதலனுடன் போய்விட்டாள்’

“ஐயோ! பஞ்சுபோன்ற கால் பால் வனத்திலே நடக்கும் போது வருந்துமே !’

கழிய காவி குற்றும், கடல வெண் தலைப் புணரி ஆடியும், கன்றே பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர, இவ் வழிப் படுதலும் ஒல்லாள் - அவ் வழிப் பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ. செல் மழை தவழும் சென்னி விண் உயர் பிறங்கல் விலங்கு மலே நாட்டே !

-மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்

184. இனமும் சினமும்

“பொருள் தேடிச் சென்றிருக்கிருன் அவளது காதலன். அவனது பிரிவை ஆற்றி யிரு’ என்று கூறுகிருள் தோழி. கேட்டாள் அவள். சீறிள்ை. ஏன் ? தோழியின்மீது கோபம் அவளுக்கு. காரணம் ? அவன் போகிறேன்’ என்றபோது தடுத்து நிறுத்தவில்லை. அந்தக் கோபம். எனவே, தோழிமீது சிறிள்ை.

“அப்போது அவரைத் தடுத்து நிறுத்தக் காணுேம். இப் போது வந்து எனக்கு ஆறுதல் சொல்ல வந்துவிட்டாள்” என்று எரிந்தாள்.

“கான் வருந்துவது எப்படித் தெரிந்தது இந்த ஊராருக்கு ‘ என்று கேட்டாள்.

வேதின வெரிகின் ஓதி முது போத்து, ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும் சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,