பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கு று க் ெத ைக க்

ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் யாங்கு அறிந்தன்று - இவ் அழுங்கல் ஊரே:

-அள்ளுர் கன்முல்லை

185. அஞ்சினவளும் வெஞ்சினமும்

‘பிரியேன்” என்றான் காதலன். கேட்டாள் அவள். *பிரிய எண்ணி யிருக்கிருன்’ என்று முடிவு செய்தாள். வருந்தி ளுள். முகம் வேறுபட்டது. கண்டான் அவன்.

சத்தியமாகச் சொல்கிறேன். உன்னைப் பிரியமாட்டேன்’ என்றான்.

‘பிரிந்தாலோ...?’ என்றாள் அவள்.

“இரவலர்:வாராத வைகல் பல நான் பெறுக’ என்றான்.

குறுகில மன்னர்க்குப் பெருமை எது ? இரவலர்களுக்கு வாரி வாரி வழங்குவது. இரவலர் ஏதாவது ஒருநாள் அவன் விடு தேடி வரவில்லையானுல் அந்த நாளே குறுநில மன்னர்க்குத் துன்ப நாள். எனவே இரவலர் வாராத நாள் பல ஆகுக’ என்றால், நீண்ட நாள் துன்பம் அடைவேகை என்று பொருள். மெல் இயல் அரிவை ! நின் நல் அகம் புலம்ப, கிற் துறந்து அமைகுவென்ஆயின் - எற் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக! - யான் செலவுறு தகவே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

186. உயிரும் உடலும்

“ஆருயிரே !’ என்றாள். ‘அன்பே’ என்றான். “காதலிக்கு உயிர் ?’ என்று கேட்டாள். “காதலன்’ என்றான், மகிழ்ந்தாள். காதலனுக்கு உயிரோ ?’ என்றாள்.