பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட் சி க ள் 201

“காதலனைக் காணுேமே” என்று சொல்லிக் கண்ணி வடித்தாள்.

“ஏன் அழறே. அழாதே. கண்ணிரைத் துடை” என்றாள் தோழி.

‘இன்னும் வரவில்லையே” என்று கூறிருள் அவள்.

“அவரைத்தேடி அழைத்துவர ஆள் அனுப்புவோம்”

“எங்கே போய் தேடுவது ?”

“எங்கேபோய் தேடுவதா? அவர் என்ன பூமியைக் குடைந்து கொண்டா போயிருப்பார் ?”

“tosti Liri**

“வானத்திலே பறந்தா போயிருப்பார் ?”

    • Ir -fi**

‘கடல்மேலே நடந்தா போயிருப்பார் ?”

மோட்டார்’

‘பின் என்ன? எங்கேயாவது ஒரு நாட்டில்தானே இருப்பார் ?”

ஆமாம்”

‘நாடு நாடாகத் தேடச் சொல்லி ஆள் அனுப்புவோம். ஊர் ஊராகத் தேடச் சொல்லுவோம். ஒவ்வொரு குடியிலும் தேடச் சொல்லுவோம். கிடைக்காமலா போய் விடுவார்?’

‘அப்படியானல் சரி. புறப்படு, போவோம்.”

நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏருர் ; விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்; காட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரின், கெடுநரும் உளரோ ? - நம் காதலோரே.

-வெள்ளிவீதியார்

189. போகிறேனடி தோழி

“போய் வருகிறேன்” என்றான் அவன். ‘எங்கே ?’ என்று கேட்டாள் தோழி. ‘பொருள் தேடுவதற்கு’ என்றான்.