பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 205.

ஊட்டுகிறது. தனக்கு வெயிலாயிருப்பினும், வருத்தமாயிருப் பினும் தன் குட்டியின் வாட்டம் போக்கி கிழல் தருகிறது’ என்று வியப்பார்.

‘வியந்து.........?’ “நாமும் அப்படி நடப்போமாக. நமக்குத் துன்பமாக இருப் பினும் அதைப் பொறுப்போம். நமது காதலிக்கு இன்பம் தரும் இல்லறம் வளர்க! என்று எண்ணுவார்’

  • எண்ணி........ g ‘எடுத்த காரியம் வெற்றி பெறச் செல்வார்’

நசை நன்கு உடையர் - தோழி! - ஞெரேரெனக் கவைத் தலே முது கலே காலின் ஒற்றிப் பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருங் ததரல் ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின் தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி, கின்று வெயில் கழிக்கும் என்ப . நம் இன் துயில் முனிநர் சென்ற ஆறே.

-கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

193. மானே! மனங்கலங்காதே!

காதலன் ஒருவன். காதலியைப் பிரிந்து சென்றிருக்கிருன். பொருள் தேடுவதற்காக. போயிருக்கிற வழி எப்பேர்ப்பட்டது ? மிகவும் பயங்கரமான பாலே கிலம். மராமரங்கள் நிறைந்தது. அந்த மராமரங்கள் மலர்ந்திருக்கும். தும்பி என்ன செய்யும் ? அந்த மலர்களிலே வந்து மொய்க்கும். தேன் உண்பதற்காக. மலரிலே மொய்த்த பிறகு தான் தெரியும் அதிலே தேன் இல்லை என்று. திரும்பும்! இத்தகைய வழியிலே போகும் போது காத லன் தனது காதலியை நினைப்பான ? நினைத்தால் என் செய் வான் ? மேற்கொண்ட காரியத்தை முடித்து வெற்றியுடன் மீளாது பாதியிலே திரும்புவா ை? காதலியைக் காண்பதற்காக,

அப்படிப் பாதியிலே திரும்பி வந்தால் அது கேவலமாயிற்றே.

இந்த மாதிரி யெல்லால் மனம் குழம்புகிருள் அவள்.