பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கு று க் .ெ தா ைக க்

விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் கடனும் பூணும்; கைங் நூல் யாவாம்; புள்ளும் ஓராம்; விரிச்சியும் கில்லாம்; உள்ளலும் உள்ளாம் அன்றே - தோழி! . உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று இமைப்பு வரை அமையா நம்வயின் மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.

-கொற்றன்

196. ஊ ைம யி ன் துன் பம் !

இரவு நேரம். பசு ஒன்று கிணற்றிலே விழுந்து விட்டது. அவதிப்படுகிறது. அதைக் கண்டான் ஒருவன். அவனுக்கு இரக்க முண்டாயிற்று. பசு படும் துயர் கண்டு அவனும் துன்புற் ருன். அவனே ஊமை. வாய் திறந்து பேச முடியாதவன். ‘ஆ ஊ என்கிருனே தவிர இன்னது என்று எவருக்கும் விளங் கச் சொல்ல முடியவில்லே அவேைல. அவனது துயரத்தை எங்ஙனம் ஆற்றுதல் இயலும்? அல்லது அவனது துயரத்தினலே ஏதாவது பயனுண்டா ? ஒன்றுமில்லை.

“இந்த ஊமையனைப் போல அவதிப்படுகிருள் எனது தோழி. ஏன் ? நான் படும் துயர் கண்டு. நான் தான் எனது காதலனை எண்ணி வருந்துகிறேன். இவள் என்னேக் கண்டு ஏன் வருந்து கிருள் இதுதான் எனக்கு மிக வருத்தமாயிருக் கிறது” என்றாள் அவள்.

கவலே யாத்த அவல நீள் இடைச் சென்றாேர் கொடுமை எற்றி, துஞ்சா கோயினும் நோய் ஆகின்றே - கூவற் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.

-கூவன் மைந்தன்