பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 209

197 அன்று மோதியவர் இன்று காதலர்

“பார்த்தியா’ என்று கேட்டான் வழிப்போக்கன். ‘யாரை ?’ என்றான் இன்னொருவன். “இதோ போகிறார்கள் பார்’ “ஆமாம் ! புது ஜோடி போலிருக்கே !’ தெரியல்லையா ?” தெரியவில்லையே! யார் அது ?” ‘அடே! நம்ம வடக்குத் தெருவிலே இல்லே?” “ஆமாம்! சிறிசுகளா இருந்தாங்களே ! இந்த இரண்டும் சிண்டைப் பிய்த்துக்கொண்டு சண்டை போடும். அம்மா தடுத் தாலும் கேளாது ; கில்லாது. என்னடா என்றால் இப்போ ! காதல் ! காதல் ஜோடி !’

‘இரண்டு பேரும் ஊரை விட்டு ஒடிப் போகிறார்கள்’ ‘காலத்தின் கோலத்தைப் பார்த்தியா ?” “பாலே நிலத்தின் மகிமையே மகிமை !’ ‘ஊழின் வலிமையே வலிமை l’

இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன் தல்ை ஒரி வாங்குகள் பரியவும், காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, ஏதில் சிறு செரு உறுபமன்னே; கல்லே மன்றம்ம் பாலே - மெல் இயல் துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்

மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.

--மோதாசனர்

198. நேமி பின்னே நெஞ்சு முன்னே

பொருள் தேடப் போயிருந்தான் அவன். தேடி விட்டான். மீண்டு வருகிருன் தலைவியைக் காண்பதற்கு. வெகு வேகமாக வருகிறது தேர்.

14