பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 கு று ங் தொ ைக க்

‘போய் விட்டதடா என் மனம்’’ என்றான்.

“எங்கே ?’ என்றான் பாகன்.

‘அவளிடத்திலே’

‘அது போய் என்ன பயன் ?’’

“ஆமாம். என் இரு கைகளாலும் இறுகத் தழுவிக் கொள் வது போல் தழுவ முடியுமா ? முடியாதே. அதல்ை என்ன பயன் ?”

“இதோ ஆயிற்று. விரைவில் போகலாம்”

“ஐயோ ! இன்னும் தொலை தூரம் இருக்கிறதே ! மலைகள் எத்தனே ? சோலைகள் எத்தனே ?”

அஞ்சுவது அறியாது, அமர் துணே தழlஇ, நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய கை பிணி நெகிழின் அஃது எவனே? நன்றும் சேய அம்ம, இருவாம் இடையே; மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு, கோட் புலி வழங்கும் சோலே எனைத்து என்று எண்ணுகோ. முயக்கிடை மலேவே?

-அள்ளுர் நன்முல்லை

199. வாடையே வாட்டாதே!’

நீண்ட காலமாயிற்று. காதலியைப் பிரிந்திருந்தான். இப் போது திரும்பி வருகிருண். வெகு வேகமாகத் தேரைச் செலுத் திக் கொண்டு வருகிருன். அந்த நேரத்திலே வாடைக் காற்று வீசுகிறது. வாடை வந்துவிட்டதே! அவள் வருந்துவாளே !” என்று நினைக்கிருன்.

‘வாடைக் காற்றே ! நீ வாழ்க 1 அதோ பார் 1 அந்த மலே யின் உச்சியிலே பாம்புச் சட்டை மாதிரி தெரிகிறதே! அருவி ! அதற்குப் பக்கத்திலே சில குடிசைகள் ! அதுதான் எனது காதலி வசிக்கும் ஊர். அங்கே சென்று அவளைப் பாதுகாப்பாயாக !” என்கிருன்.