பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கு று ங் தொ ைக க்

‘வாடை வரும்போது’ என்றான். ‘வாடை வரும் காலத்தை எதிர்பார்த்து இருந்தாள் அவள். வாடைக்காலம் எப்போது வரும்? இன்னும் எவ்வளவு நாள் செல்லும் ? என்று அறிந்துகொள்ள விரும்பினுள் தோழி. எவரிடம் கேட்டு அறிவது ? இப்படி யோசித்துக்கொண்டே யிருந்தாள்.

அந்த நேரத்திலே அங்கு ஒரு துறவி சென்றார். அருகில் சென்றாள் அவள். அவரை வணங்கிள்ை.

சாel” என்றாள். ‘ஏன் தாயே 1’ என்றார் சாமியார். “நாய் இல்லாததொரு வீட்டிலே செந்நெல் அரிசிச் சோறும் வெண்மையான நெய்யும் தங்களுக்குக் கிடைப்பதாக, வயிறு கிறைய உண்டு, பனிக்காலத்துக்கு வேண்டிய வெந்நீரும் கமண் டலம் நிறையப் பெறுவீராக!’ என்றாள்.

“வாழ்க’ என் ருர் சாமியார், ‘வாடைக்காலம் வருவது எப்போது ?’’ என்று கேட்டாள். “ஏன் கேட்கிறாய்?’ என்றார். ‘அப்போது வருவார் என் தோழியின் காதலர். அதனல் கேட்கிறேன்’ என்றாள்.

ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை, செங்கெல் அமலே வெண்மை வெள் இழுது ஓர் இல் பிச்சை ஆர மாந்தி, அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பில் பெறி இயரோ, நீயே - ‘மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை, எக் கால் வருவது?’ என்றி ; அக் கால் வருவர், எம் காதலோரே. -

-ஓரிற் பிச்சையார்

211. இன்ப நினைப்பும் துன்ப மறப்பும்

பாலே நிலத்தின் வழியே செல்கிருன் அவன். வெம்மை தாங்க முடியவில்லை. தவிக்கிருன். காதலியை கினைக்கிருன்.