பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 219

அவளது மேனி அழகை எண்ணுகிருன். அவளது இன்ப நோக்

கினைச் சிந்திக்கிருன். அவ்விதம் சிந்தித்தபடியே செல்கிருன்.

மனம் அவள் வசம் சென்றது. வழியின் கொடுமையை மறந்தான்.

“ஆகா! என்ன ஆனந்தம்’ என்று மகிழ்கிருன்.

புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து இறவுச் சினே அன்ன நளி கனி உதிர, விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு, வருகர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் இன்னக் கானமும், இனிய - பொன்னெடு மணி மிடை அல்குல் மடங்தை அணி முலே ஆகம் முயங்கினம் செலினே.

-உருத்திரன்

212. மந்தியும் மங்கையும்

காதலன் வந்தான். கஞ்சாங்கோரையினலே பாவை செய்து கொடுத்தான். அதை வைத்து விளையாடினுள் அவள் : மகிழ்ந் தாள். அவன் பிரிந்து சென்ற காலத்திலே அந்தப் பாவையை வைத்து மகிழ்ந்தாள்.

‘இந்தப் பாவையையும் என்னேயும் மறந்தாரே என்று ஏங்கிள்ை. -

‘மலைநாட்டிலே உள்ள ஆண் குரங்கு என்ன செய்யும் ? மரத்தின்மீது ஏறிக்கொள்ளும், பெண் குரங்கு தன் குட்டி களுடன் கீழே இருக்கும். ஆண் குரங்கு மரக்கிளேயை உலுக்கும். பழங்கள் உதிரும். கீழே உள்ள பெண் குரங்கும் குட்டிகளும் அவற்றைப் பொறுக்கித் தின்னும்.

‘இது கண்டிருப்பார் அவர். அப்போதாவது என் மீதும் இப் பாவை மீதும் கினைப்பு ஏற்படலாம் அல்லவா ? இல்லேயே t மறந்தே போனரே !’ என்று ஏங்கிள்ை.

உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்