பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 குறுங் தொ ைக க்

சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் கொடியர் வாழி - தோழி! - கடுவன் ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, ஒர்ப்பன ஒர்ப்பன உண்ணும் பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

-பேரிசாத்தன்

213. பாலையும் கவலையும்

|

“ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாய்?’ என்று கேட்டாள் தோழி.

“ஒன்றுமில்லை. வெளியூர் சென்றாரே பாலை கிலத்தைக் கடந்தாரோ! கடக்கவில்லையோ ! என்று எண்ணினேன்,’ என்றாள், அவள்.

‘கடந்து சென்றிருப்பார்’

“ஐயோ பாவம் ! எப்படிக் கடந்து சென்றாரோ. எவ்வளவு கஷ்டப்பட்டாரோ ?’ என்று பெருமூச்சு விட்டாள்.

வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின் கொம்மைப் போங்தைக் குடுமி வெண் தோட்டு, அத்த வேம்பின் அமலே வான் பூச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, குன்று தலைமணந்த கானம் சென்றனர்கொல்லோ - சேயிழை - நமரே?

-குடவாயிற் கீரத்தன்

214. வரகும் வரவும்

‘கார் காலத்தே வருவேன்’ என்று சொல்லிப் போன்ை அவன். சொன்ன காலமும் வந்து விட்டது. செம்மண் கிலத் திலே விதைக்கப்பட்ட வரகு முற்றியது. மான் குட்டிகள் தின்று மகிழ்ந்தன.