பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கு று ங் ெத ைக க்

மலிந்தது. அவ்வழி வருவோரைக் கொன்று குவிக்கும் கொடிய வர் கிறைந்தது. எவர் வருவார்?’ என்று காத்திருப்பார் அக் கொடியவர். எவரைக் கொல்வார் உண்ணலாம்’ என்று வட்ட மிடும் பருந்து. இத்தகைய நீரற்ற பாலை வழியே செல்கிரு.ர். அவர் வாழ்க!” என்றாள். ‘உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்; இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு’ எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர் வாழி-தோழி!-என்றும் கூற்றத்தன்ன கொலே வேல் மறவர் ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படு முடைப் பருந்து பார்த்திருக்கும் நெடு மூதிடைய நீர் இல் ஆறே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

216. பகலும் வாரார் இரவும் வாரார்

‘வருவேன் என்று சொல்லிப் போன பருவமும் வந்து விட் டது. ஆனால் அவர் இன்னமும் வரவில்லே’ என்று வருந்தினள் அவள்.

அன்று அன்று. இதுவன்று அவர் கூறிய பருவம்’ என்றாள் தோழி. -
ஆமாம். நீ ரொம்ப கண்டாயாக்கும். இதுதான் அவர் சொன்ன பருவம். அதோ பார்! அந்த ஆண் புருவும் பெண் புரு வும் எவ்வளவு இன்பமாயிருக்கின்றன. எத்தனே முறை அணேத்து இன்புறுகின்றன . நான் மட்டும் இப்படித் தனிமையில் தவிக்கிறேன்’

பொறு; பொறு. வந்து விடுவார்’ என்றாள் தோழி. வந்து விடுவார் வந்து விடுவார் என்று நீயும் சொல்லிக் கொண்டே யிருக்கிறாய். நானும் கம்பிக் கொண்டே இருக் இறேன். பகல் நேரம் முழுதும் வருவார் வருவார் என்று எதிர் பார்த்திருக்கிறேன். ஏமாந்து போகிறேன். பிறகு இரவு வரு