பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 . 8 sir 25

இந்த வழி கடந்து போவாரா? மாந்தளிர், போன்ற உன் மேனி வாட விடுவாரா?” என்றாள் தோழி.

நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, ஆறு செல் வம்பலர் தொலேய, மாறு கின்று, கொடுஞ் சிலே மறவர் கடறு கூட்டுண்ணும் கடுங்கண் யானைக் கானம் நீந்தி, - இறப்பர்கொல் வாழி-தோழி-கறுவடிப் பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன நல் மா மேனி பசப்ப, நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.

-வாடாப் பிரமந்தன்

220. நல்ல யோசனை !

“நான் ஒரு யோசனை சொல்லவா?” சொல்லேன்’ “சொல்கிறேன். அதை நீ எண்ணிப்பார்’ “உனது காதலன் இருக்கிருனே! மலைநாடன்’ “ஆமாம். இருக்கிருன். அதற்கென்ன?” ‘அந்த மலைநாட்டிலே வேங்கைப் பூ வாடிக்கிடக்கும். வேங்கைப் புலியும் துவண்டு கிடக்கும். எதல்ை? யானைமீது பாய்ந்து, அதன் கொம்பினால் குத்தப்பட்டதால்.”

சரி. அதற்கென்ன இப்போ?” “அவனுடன் நீ போய் விடு’ “காதலனுடன் ஒடிப் போகச் சொல்கிருயா?” “ஆமாம்!”

நினையாய் வாழி-தோழி!-நனை கவுள் அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தெனமிகு வலி இரும் புலிப் பகுவாய் ஏற்றைவெண் கோடு செம் மறுக் கொளிஇய, விடர் முகைக் கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை

15