பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 233

பெரிது என்று எண்ணவில்லை. எனக்கொரு வார்த்தை ஆறுதல் கூறுவாரும் இங்கேயில்லை. சந்திரனுக்குக் கிரகணம் பிடிக்கிற போது உலகத்தார் என்ன என்னவோ பேசிப் பின் தூங்குவது போலத் தூங்கி விட்டாள் எனது தோழி. நான் என்ன செய் வேன் ! அவர் இருக்குமிடத்துக்கே போகலாமா?’ என்று புலம்பு கிருள் அவள்.

நெஞ்சே நிறை ஒல்லாதே; அவரே, அன்பு இன்மையின், அருள் பொருள் என்னர்; வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே, அரவு நுங்கு மதியிற்கு இவனேர் போலக் களேயார் ஆயினும், கண் இனிது படீஇயர்: அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில் அளிதோதானே நாணே - ஆங்கு அவர் வதிவயின் நீக்கப்படினே !

333. காளையும் காதலியும்

காதலன் காதலி இருவரும் நடந்து செல்கின்றனர் பாலை வழியே. இளம் வயது. கையிலே வேல் ஏந்தி நடக்கிருன் அவன். அவன் கைபற்றி கடக்கிருள் அவள். பொழுது சாய்ந்தது. அந்த நேரத்திலேஅவர்களைக் கண்டனர் வழி நடப்போர் சிலர்.

“எங்கே போகிறீர்கள் பொழுது போன நேரத்திலே? மேலே போகாதீர்கள். பாலைநிலக் கள்வர்களின் பறை முழங்குகிறதே! கேட்கவில்லையா?”

கேட்கிறது’

வேண்டாம். போகாதீர்கள்’’

  • நான் வீரன். கள்வருக்கு அஞ்சேன்’

‘'நீ வீரன் தான். ஆனல் உன் அருகே இந்த இளம் பெண் இருக்கிருளே. இவளேக் காக்க வேண்டாமா? இவள் பொருட் டாவது மேற்கொண்டு நடப்பதை நிறுத்து. சொல்வதைக் கேள்.”