பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கு று ங் தொ ைக க்

எல்லும் எல்லின்று; பாடும் கேளாய் - செல்லாதிமோ, சிறுபிடி துணையே! - வேற்று முனே வெம்மையின், சாத்து வந்து இறுத்தென, வளை அணி நெடு வேல் ஏந்தி, மிளே வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.

-உறையூர் முதுகொற்றன்

234. சோலையல்ல பெண்ணே ! பாலை’

‘நானும் வருகிறேன்’ என்றாள் அவள். “ஐயோ! நீயுமா?’ என்றான் அவன். ஆமாம்” *செல்லும் வழி எப்பேர்ப்பட்டது தெரியுமா? நீரில்லாத பாலே கிலம். அதிலே நீ எப்படி நடப்பாய்? வாடிப்போவாய்”

‘அடியிலே நீர் உள்ள குவளே மலர் மேல் காற்றுக் காலத் திலே வர்டுமோ? வாடாது. அதுபோல உன்னுடன் வருவதால் பாலே நிலம் வருத்தம் தராது”

‘உப்பு வியாபாரிகள் மொட்டை வண்டியில் மூட்டைகளே ஏற்றிச் செல்வார்கள். அந்த மாதிரி மொட்டையான மரங்கள் நிற்கும். நிழல் தராது. நீர் தேடி அகப்படாமல் வருந்திய யானே மரப்பட்டைகளே உரித்துக் கடிக்கும். அதிலும் நீர் இன்றியிருப்பக் கண்டு துதிக்கை தூக்கி வருந்தும். இத்தகைய பாலே நிலத்திலே நடக்க முடியுமா?’

‘முடியும். உன்னுடன் வந்தால் போதும். அதுவே இன்பம். வராதிருப்பதே துன்பமாகும்.” நீர் கால்யாத்த கிரை இதழ்க் குவளை கோடை ஒற்றினும் வாடாதாகும்; கவனே அன்ன பூட்டுப் பொருது அசாஅ உமண் எருத்து ஒழுகைத் தோடு கிரைத்தன்ன முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், யானே கைம்மடித்து உயவும் கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.

-ஒளவையாா