பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 கு று ங் தொ ைகக்

38. அளைந்த அத்தியும் உளைந்த நெஞ்சும்

‘வருவேன்” என்றான்.

“வருவாய்” என்றாள்.

விரைவில்” என்றான்.

“வரைவாய்” என்றாள்.

“மறவேன்’ என்றான்.

இளவேனில்’ என்றாள்.

“வருவது உறுதி” என்றான்.

இளவேனில் காலத்தை எதிர்பார்த்திருந்தாள் அவள். இள வேனிலும் வந்தது. ஆனல் அவன் வரவில்லை. என்ன செய்வாள் அவள் ! பாவம் துடிக்கிருள்; துன்புறுகிருள் ; கண்ணிர் வடிக்கிருள்.

“அழாதே கண்ணிரைத் துடை” என்றாள் தோழி.

‘நான் என்னடி செய்வேன் அவர் வரவில்லையே! ஊரார் கூறும் பழி என்னல் தாங்க முடியவில்லை. கண்டு துளைத்த அத் திப் பழம்போல என் நெஞ்சைத் துளைக்கிறதே’ என்று புலம்பு கிருள் அவள். கருங்கால்,வேம்பின் ஒண் பூ யாணர் என்னை இன்றியும் கழிவது கொல்லோ 1 ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து, எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் குழைய, கொடியோர் காவே காதலர் அகல, கல்’ என்று அவ்வே!

239. காரும் காதலனும்

‘போய் வருகிறேன்” என்றான் அவன். “எப்பொழுது வருவாய் ?’ என்று கேட்டாள் அவள். கார் காலத்தே’ என்றான். ‘காத்திருப்பேன்’ என்றாள்.