பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 241

கவலைப் படாதே’ என்றான்.

நாட்கள் சென்றன. இன்று, காளே என்று காட்களே எண் ணரிக் கொண்டிருந்தாள் அவள். கொன்றை பூத்தது. மகளிர் குழல் போல் சரம் சரமாகத் தொங்கியது.

கார் காலம் வரும் அறிகுறி தோன்றியது. காதலன் வர வில்லை. அவள் வருந்துவாளே என்ற கவலே தோழிக்கு.

‘வருந்தாதே வந்து விடுவான் உன் காதலன்’ என்றாள் தோழி. -

‘இன்னும் கார் காலம் வரவில்லேயே வந்திருந்தால் அவரும் வந்திருப்பாரே. பொய் சொல்லக் கூடியவர் அல்லர் அவர்’ என்றாள் அவள்.

வண்டு படத் ததைந்த கொடியிணர் இடை இடுபு பொன்செய் புனே இழை கட்டிய மகளிர் கதுப்பில் தோன்றும் புதுப் பூங் கொன்றைக் கானம் காரெனக் கூறினும் யானே தேறேன் ;-அவர் பொய் வழங்கலரே.

-ஓதலாந்தையார்

240. கொன்றை மலரும் கொண்டவன் வரவும்

மாரிக் காலம் வந்து விட்டது. மழை பெய்கிறது. கொன்றை மரங்கள் மலர்கின்றன. இவற்றைக் கண்டாள் அவள்.

கொன்றை மலருங் காலத்தே வருவேன் என்று சொல்லிப் போனரே ! போனவர் இன்னும் வரவில்லேயே 1’ என்று ஏங்குகிருள்.

‘அடி பயித்தியமே கார் காலம் வந்துவிட்டது என்றா கினைக்கிறாய்? அதெல்லாம் ஒன்றுமில்லை. பருவமில்லாக் காலத் திலே பெய்த வம்ப மாரி இது. இது கண்டு கொன்றை மலர் கிறது. தவருக மாரிக் காலம் என்று எண்ணி, இன்னும் மாரிக் காலம் வரவில்லை. மழை பெய்து விட்டதே கொன்றை மலர் கிறதே! பாலே வழிச் சென்ற நம் காதலன் வரவில்லையே” என்று எண்ணி வருந்தாதே ‘ என்றாள் தோழி.

16