பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 243

‘இன்னுமா உயிர் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட் பது போல் கார் காலம் வந்து விட்டதே’ என்றாள். கண்ணர் வடித்தாள்.

வன் பரற் தெள் அறல் பருகிய இரலே தன் இன்புறு துணையொடு மறுவந்து உகள, தான் வந்தன்றே, தளி தரு தண் கார் - வாராது உறையுநர் வரல் நசைஇ, வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.

-கோவூர் கிழார்

243. பிரி வும் பீர் க் கும்

‘நமக்கு வேண்டியவர் யாரும் இல்லையே! என்ன செய் வேன்?’ என்றாள் அவள்.

ஏன் ?’ என்று கேட்டாள் தோழி. ‘நமது கொல்லேயிலே பீர்க்கு பூத்து விட்டது” ஆமாம் ! அதற்கென்ன ?” *அதைக் கொண்டுபோய் அவருக்குக் காட்ட வேண்டும்’ *ஏன் g ‘நீ புறப்பட்டபோது அழகாக இருந்த உன் காதலியின் நெற்றி அழகு இழந்து பீர்க்கம் பூப்போல் பசலே படர்ந்துவிட்டது. கார் காலத்தின் தொடக்கத்திலே வருவேன் என்றாயே கார் காலமும் வந்தது. பீர்க்கையும் பூத்தது. நீயோ வரவில்லை. அவளோ வருந்துகிருள் என்று சொல்லக் கூடியவர் எவரு மில்லையே 1’ என்றாள்.

‘இன்னள் ஆயினள். நன்னுதல் என்று, அவர்த் துன்னச் சென்று செப்புகர்ப் பெறினே, நன்றுமன் வாழி - தோழி! - நம் படப்பை நீர் வார் பைம் புதற் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.

-கோக்குளமுற்றன்