பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 247

247. முல்லை மலர்ந்தது முகம் மலர்வாய் !

காதலன் வரும் நாளைக் கணக்கிட்டுச் சுவரிலே கோடு போட்டிருந்தாள். அதை எண்ணி எண்ணிப் பார்த்து ஏங்கிளுள்; வருந்தினுள். வளைகள் நெகிழ்ந்தன.

‘வருந்தாதே ! இதோ பார் வந்துவிட்டது. முல்லை மலரும் காலம் !’ என்றாள் தோழி: -

மாடு மேய்க்கும் இடையர்கள் தலையிலே முல்லே மலர் சூடிச் சென்றார்கள். அதைக் காட்டிள்ை அவளுக்கு.

வீங்கு இழை நெகிழ, விம்மி, ஈங்கே எறிகண் பேதுறல்; ஆய்கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க வருவேம்’ என்ற பருவம் உதுக்காண் : தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் பல் ஆன் கோவலர் கண்ணிச் சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.

-கொற்றன்

248. ம டி க ண் ட மங் ைக

பனிக்காலம். மாலே கேரம், பகல் முழுதும் புல் மேய்ந்த பசுக்கள் வீடு திரும்புகின்றன. கன்றை கினேந்து மடி கனத்துப் பால் வழிகிறது.

பார்த்தாள் அவள். கண்ணிர் வடித்தாள்.

‘புண்ணியசாலிகள்’ என்றாள்.

யார்?’ என்றாள் தோழி.

‘இத்தகைய மாலேயிலே காதலன் வரப்பெற்றாேர்’ என்றாள். நோற்றாேர் மன்ற - தோழி! - தண்ணெனத் துாற்றும் துவலேப் பனிக் கடுங் திங்கள் புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றாெடு