பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 95.3

‘இல்லையடி இல்லை. யார் கடன் கின்றாலும் மாரி கடன் கில்லாது அல்லவா? சென்ற கார் காலத்திலே பெய்யாது எஞ்சிய மழையை இப்போது பெய்கிறது. இது வம்பு மாரி, பாத்திரத்தைக் காலி செய்கிறது. அது கண்டு முட்டாள்தனமாக மயில் ஆடு கிறது” என்றாள் தோழி. மடவ வாழி - மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென, அதன் எதிர் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன ; கார் அன்று. இகுளே ! . தீர்க, கின் படரே ! கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர், புது நீர் கொளிஇய, உகுத்தரும் நொதுமல் வான்த்து முழங்கு குரல் கேட்டே.

-இடைக்காடன்

258. பிரியமும் பிரியாமையும்

“நம்ம பெண்ணப் பார்த்தியா? எப்படிக் குடித்தனம் செய் கிருள்?’ என்று கேட்டாள் தாய். -

“ஒ. பார்த்தேனே ! நன்றாகத்தான் இருக்கிருள்” என்றாள் செவிலி.

‘கணவன் பிரியமா யிருக்கிருன?”

‘பிரியமாவும் இருக்கிழுன் ; பிரியாமலும் இருக்கிருன். எங்கே போனலும் அதிக நேரம் தங்குவதில்லை. அவளே கினைத்து வந்து விடுகிருன். அரசன் ஆணேப்படி வெளியூர் சென்றால்கூட சுறு சுறுப்பாக வேலையை முடித்து வந்துவிடுகிருன்.”

கானங்கோழிக் கவர் குரற் சேவல் ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப் புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் சீறுரோளே, மடங்தை ; வேறு ஊர் வேந்து விடு தொழிலொடு செலினும், சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.

-குழற்றத்தன்