பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 257

264. மயிலும் மங்கையும்

மின்னல் மின்னுகிறது. மேகம் இடிக்கிறது. மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. அவள் வருந்தினள்.

‘மேகம் வருத்துகிறதோ?’ என்றாள் தோழி.

மேகம் மட்டுமா வருத்துகிறது? இந்த மயிலும்தான். என் நெஞ்சு படும் பாட்டை என்ன என்பேன்?’

என் எனப்படுங்கொல்-தோழி!-மின்னு வர வான் ஏர்பு இரங்கும் ஒன்றாே? அதன் எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும்; ஏதில கலந்த இரண்டற்கு என் பேதை கெஞ்சம் பெரு மலக்குறுமே?

--கோவர்த்தனர்

265. அணைப்பும் ஆனந்தமும்

“காதலனைப் பிரிந்து நீண்டகாள் ஆயிற்றே. எப்படி ஆற்றி யிருந்தாய்?’ என்று கேட்டாள் தோழி.

களவுக் காதல் நிகழ்ந்த போது முல்லே மலர் மணம் வீச வந்து நிலவிலே என்னைக் கட்டி அணேத்தானே, அதை &னத் தேன். அந்த மணம் இன்னமும் என் மேனியில் இருக்கிறது. அது என்னை ஆற்றியது” என்றாள் அவள்.

மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை, தட்டைப் பறையின், கறங்கும் நாடன் தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் மணந்தனன்மன் எம் தோளே; இன்றும், முல்லே முகை நாறும்மே.

-அரிசில் கிழார்

17