பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 259

“ஆகா ! இந்தக் காளை மத்தியில் இருக்கும் பசுக்கள் செய்த பாக்கியம்கூட நான் செய்யவில்லையே t’ என்று ஏங்குகிருள். நெறி இருங் கதுப்பொடு பெருங் தோள் நீவி, செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றாேர் அறிவர்கொல் வாழி - தோழி ! - பொறி வரி வெஞ் சின அரவின் பைங் தலை துமிய கரை உரும் உரறும் அரை இருள் நடுநாள், கல் ஏறு இயங்குதொறு இயம்பும் பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே ?

-பூதம்புல்லன்

368. அழகு குலைத்த அன்பர்

‘கார் காலம் வந்துவிட்டது. மழை பொழிகிறது. முல்லை கிலம் இனிய காட்சி தருகிறது. முல்லேக் கொடிகள் அரும்பி விட் டன. எனது மனங் குலையவைக்க வந்துவிட்டது மாலை. ஆனல் என் அழகு குலேத்த அன்பர் இன்னும் வரவில்லையே!”

முகை முற்றினவே முல்லை; முல்லையொடு தகை முற்றினவே, தண் கார் வியன் புனம் - வால் இழை நெகிழ்த்தோர் வாரார் . மாலே வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.

--மதுரை அளக்கர் ஞாழார் மகளுர் மள்ளனர்

269, ஏங்கியது உள்ளம்

}

இடி இடித்தது. மழை பெய்தது. கொல்லையிலே முல்லை அரும்பியது. கண்டாள் அவள் கார் காலம் வந்துவிட்டது என்று அறிந்தாள். ஆனல் அவனே வரவில்லை. வரவில்லையே என்ற ஏக்கம் அவளுக்கு. தூக்கம் வரவில்லே.

“ஏனடி முகம் ஒரு மாதிரியாக இருக்கிறதே?’ என்றாள் தோழி.